உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கறுப்பு ஜூலை நினைவேந்தல்
காரைநகர் மடத்துக்கரை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி - காரைநகர் மூலக்கிளையின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று (26.07.2023) நடைபெற்றது.
இதன்போது பொதுச் சுடரினை, இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் ஏற்றி வைத்தார்.

அதன்பின்னர் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை - காரைநகர் மூலக்கிளையின் தலைவரும், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபையின் தவிசாளருமான திரு.பாலச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பிரித்தானியா
பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பால் ஜூலை கலவரத்தில் உயிர்நீர்த்தவர்கள் நினைவேந்தல் நிகழ்வும் கண்டன ஆர்ப்பாட்டமும் பிரித்தானிய பிரதமர் இல்லத்திற்கு (Downing Street) முன்பாக நடைபெற்றது.
இதனை நினைவுகூரவும் இனப்படுகொலைக்கு எதிராகவும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்ககோரியும் இங்கு கோசங்கள் எழுப்பப்பட்டன.
செய்தி-குமார்








