மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்கும் திட்டம் - அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டச் சலுகைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.
மக்களின் வாழ்க்கைச் செலவு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ள நிலையில் குறித்த திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதம் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



