கொக்குளாய் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த அரியவகை காட்டு விலங்கு (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் அரியவகை காட்டு விலங்கினமான அழுங்கு எனப்படும் விலங்கினம் புகுந்துள்ளது.
வீட்டின் உரிமையாளர்கள் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பிற்கு தகவல் கொடுத்துள்ளதை தொடர்ந்து குறித்த வீட்டிற்கு சென்ற கொக்குளாய் பொலிஸார் குறித்த விலங்கினத்தினை பத்திரமாக மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள்.
குறிப்பிட்ட அழுங்கினை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
அழுங்கு எனப்படும் அரியவகையான காட்டு விலங்கினம் முல்லைத்தீவு மாவட்ட பாரிய
வனங்களில் காணப்படும் விலங்கினமாக காணப்பட்டாலும் இது அருகிவரும் ஒரு
விலங்கினமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
