புத்தளத்தில் கரையொதுங்கிய அரியவகை கடலாமை (Photos)
புத்தளம் கடற்கரைப் பகுதியில் அரியவகை கடலாமையொன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
புத்தளம், சிலாபம் கடற்கரைப் பகுதியில் அரியவகை கடலாமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
இவ்வாறு கரையொதுங்கிய கடலாமை (Olive Redly) ஒலிவ நிற வகையைச் சார்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கடலாமை கடலாமை 40 கிலோவிற்கும் அதிக எடைக் கொண்டு காணப்படுவதாகவும் அக்கிராம மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடைந்த நிலையில் ஆமையின் ஓடு
குறித்த ஆமையின் ஓடு உடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அக்கிராம மீனவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டில் கொழும்பு துறைமுக கடற்பரப்பிற்கு வெளியே எம்.வி.எக்ஸ்பிரஸ் கப்பல் தீப்பிடித்து எரிந்தத்து.
அதனால் பல கடலாமைகள், டொல்பின்கள், திமிங்களங்கள் தொடர்ந்தும் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |