புதுக்குடியிருப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவந்த உப பொலிஸ் பரிசோதகர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
கடமையில் நின்ற வேளை நெஞ்சுவலி ஏற்பட்டு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
கேகாலை மாவட்டம் வரக்காப்பொல பகுதியினை சேர்ந்த 56 அகவையுடைய சுனில் ஜெயரத்தின என்ற உப பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு ஏற்பட்டு இவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
இவரது சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேதப்
பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்தினரிடம் சடலம் ஒப்படைக்கப்படவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri