ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரி காணாமல் போயுள்ளார்
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கடந்த 2 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி முறைப்பாடு ஒன்றை செய்திருப்பதாக வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த அதிகாரி
காணாமல் போயுள்ள இந்த பொலிஸ் சார்ஜன்ட் வெயங்கொடை பொலிஸ் பிரிவில் வசித்து வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொலிஸ் சார்ஜன்ட் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர் என வெயங்கொடை பொலிஸார் கூறியுள்ளனர்.
தொலைபேசியிலும் தொடர்புக்கொள்ள முடியவில்லை
இவர் நேற்று முன்தினம் காலை கடமைக்கு செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார் எனவும் அவரது தொலைபேசிக்கு பல முறை அழைப்பை ஏற்படுத்திய போதிலும் அவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை என மனைவி கூறுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




