மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தரொருவர் கோவிட் சிகிச்சை பலனின்றி நேற்று கொழும்பு கோவிட் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கல்முனை - பாண்டிருப்பைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரிவில் கடமையாற்றி வந்த நிலையில் அவர் சக்கரை வியாதிக்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 30 ம் திகதி கொழும்புக்கு சென்று கடந்த 4ம் திகதி பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு கோவிட் தொற்று உறுதி கண்டறியப்பட்டது.
இதனையடுத்து,அவர் கோவிட் சிகிச்சை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.உ
