மதுபானக் கடை வேண்டும் என கோரிய கிராம மக்கள் : தமிழ்நாட்டில் சம்பவம்
மதுபானக்கடை அமைக்கப்படவேண்டும் என்றுக் கோரி, தமிழ்நாடு தருமபுரி மாவட்டத்தில் 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடும்பம் சகிதம் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தாம் மதுபானக்கடைக்காக 20 கிலோமீற்றர தூரம் செல்ல வேண்டி இருப்பதால் தங்கள் பகுதியிலேயே மதுப்பானக் கடை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் போராட்டம்
வீடுகளில் பிரச்சினை மற்றும் சிறுவர்களின் கல்விப் பாதிப்பு என்பவற்றை காரணம் காட்டி, மதுக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்துவது பல இடங்களிலும் இடம்பெறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
எனினும் மதுபானக்கடை வேண்டும் என்று கோரி பெண்கள் உட்பட்டவர்கள் மனு அளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிபட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மக்கள் போராட்டம் நடத்தி மதுக்கடையை மூட வைத்தனர்.
அதே தருமபுரி மாவட்டத்தின் பொன்னாகரம் என்ற இடத்திலேயே இன்று, பொதுமக்கள் மதுபானக்கடை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
