கொடூரமாக தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை! பொலிஸ் விசாரணையில் வெளியான காரணம்
திவுலப்பிட்டிய, துனகஹா பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கத்தி மற்றும் பொல்லுகளை கொண்டு, மூன்று பேர் நடத்திய தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
உயிரிழந்த நபர், மடம்பலே பகுதியைச் சேர்ந்த 46 வயதானவர் என தெரியவந்துள்ளது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த குறித்த நபர் திவுலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கம்பஹா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்ய திவுலப்பிட்டிய பொலிஸார் குழுவொன்றை நியமித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam
