50 கண்ணீர்ப்புகை குண்டுகளுடன் நபர் ஒருவர் கைது
ஐம்பது கண்ணீர்ப்புகை குண்டுகளுடன் நபர் ஒருவரை பொலிஸார் ராஜகிரிய பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
கண்ணீர்ப்புகை குண்டுகள் களவாடல்
நாடாளுமன்றிற்கு பிரவேசிக்கும் பொல்துவ சந்தியில் கடந்த 13ம் திகதி இடம்பெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட கண்ணீர்ப்புகை குண்டுகள் களவாடப்பட்டிருந்தன.
இவ்வாறு களவாடப்பட்ட 50 கண்ணீர்ப்புகை குண்டுகளுடன் நபர் ஒருவரை பொலிஸார் நேற்றைய தினம் ஒபேசேகரபுர பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
பொலன்னறுவையை சேர்ந்த சந்தேகநபர்
பொலிஸாரின் கைகளில் விளையாட்டு பொருளாக மாறியுள்ள கண்ணீர்புகை! பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு |
31 வயதான குறித்த நபர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் பொரளை பகுதியில் தற்காலிகமாக தங்கியிருப்பதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.



