தென்னிலங்கையில் வீடொன்றில் நடந்த விருந்து - பலருக்கு ஏற்பட்ட பாதிப்பு
இரத்தினபுரியில் வீடொன்றில் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்காமல் நடந்த விருந்து காரணமாக எட்டுப் பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
பெல்மடுல்ல, பாதகட, தேவாலேகம பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் நடந்த விருந்தில் கலந்து கொண்ட பாரிய அளவிலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைக்கு அமைய இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிரதேச சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்காமல் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நெருக்கடியான நிலையில் பொறுப்புடன் செயற்படுமாறு பெல்மடுல்ல பிரதேச மக்களிடம் கேட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் பெல்மடுல்ல பிரிவில் 18 கோவிட்19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
