ட்ரம்பின் நகர்வுகள்! கனடாவுக்கு கன்சர்வேட்டிவ் கட்சி ஆலோசனை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழுத்தங்களுக்கு மத்தியில் எல்லை தொடர்பான நிலைப்பாட்டை கனடா உற்று நோக்கி வருகிறது.
சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ள ட்ரம்ப் தற்போது அவர்களை நாடு கடத்தும் திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
இற்றிலையில், கனடா எல்லைப் பகுதியில் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
கனடிய – அமெரிக்க எல்லை
மேலும் கனடிய – அமெரிக்க எல்லைப் பகுதியில் பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
இவ்வாறன நடவடிக்கைகளுக்கு ஆயுத படையினரையும் உலங்கு வானூர்திகளையும் ஈடுபடுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் எல்லைப் பாதுகாப்பு கரிசனைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எல்லைப் பாதுகாப்புப் படையினர், எல்லைக் கடவைகளில் மட்டும் கடமையில் ஈடுபடுத்தாது ஒட்டு மொத்த எல்லைப் பகுதிகளிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமெனவும் பொலியேவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எல்லைப் பாதுகாப்பு பணிகளின் போது நவீன கருவிகளை பயன்படுத்தி சோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |