அணு ஆயுதத் தாக்குதலால் ரஷ்யாவிற்கு காத்திருக்கும் ஆபத்து
அணு ஆயுதத் தாக்குதல் ரஷ்யாவிற்கு அரசியல் அழிவை ஏற்படுத்தும் என்று உதவிப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய உதவி ஊழியர் ஒருவர் அணுவாயுத தாக்குதலுக்கு அஞ்சவில்லை, ஏனெனில் அது ரஷ்யாவிற்கு "அரசியல் அழிவை" ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஏற்கனவே போரினால் ஏற்பட்டுள்ள சேதம் அணுசக்தி தாக்குதலுக்கு ஒப்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதன்கிழமை மேற்கு நாடுகளை "அணு ஆயுத அச்சுறுத்தல்" என்று குற்றம் சாட்டியதுடன், "இது ஒரு முட்டாள்தனம் அல்ல" என்று எச்சரித்தார்.
அரசியல் ரீதியாக அழிவை சந்திக்கும் ரஷ்யா
மேலும், தனது நாட்டைப் பாதுகாக்க பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், மேற்கு உக்ரைனில் உள்ள Lviv-ஐ தளமாகக் கொண்ட உதவிப் பணியாளர் Dimko Zhluktenko குறித்த விடயம் தொடர்பில் பேசுகையில்,
இந்த நடவடிக்கையால் ரஷ்யப் படைகளுக்கு எந்த மூலோபாய நன்மையும் இருக்காது என்பதால் அணுசக்தித் தாக்குதல் இருக்கும் என்று தான் நம்பவில்லை என்றார்.
"அது நடந்தாலும், அது ஒரு பெரிய விளைவை ஏற்படுத்தாது," என்று அவர் கூறினார்.
"அவர்கள் ஒரு தந்திரோபாய அணுகுண்டுத் தாக்குதலைச் செய்தால், அது தூய பயங்கரவாதமாக இருக்கும், அது ரஷ்யாவின் முழுமையான அழிவுக்கு வழிவகுக்கும். "இது ரஷ்யப் படைகளுக்கு எந்த மூலோபாய நன்மையையும் வழங்காது, ஏனெனில் புதிய பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்கு அவர்கள் முன்னேற முடியாது.
"அதே நேரத்தில், அரசியல் ரீதியாகவும் அவர்கள் அழிக்கப்படுவார்கள், ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் போர்நிறுத்தங்களைத் திரும்பப் பெறுவார்கள் என்பதுடன் பிற நாடுகளிலிருந்து மொத்தமாக தனிமைப்படுத்தப்படுவார்கள்." என அவர் மேலும் குறிப்பிட்டார்.