புதிய ஒட்டுண்ணியால் பெரும் ஆபத்து! எச்சரிக்கிறது சுகாதாரத்துறை...
இலங்கையில் மலேரியா நோயைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களுக்குக் கடும் சவாலை விடுக்கும் வகையில் மலேரியா நோயுடன் தொடர்புடைய புதிய ஒட்டுண்ணி (Parasite) ஒன்று நாட்டில் உருவெடுத்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தேசிய மலேரியா ஒழிப்பு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசங்க சேரசிங்க இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்துரையாற்றிய அவர்
கடந்த வருடத்தில் நாட்டில் 34 மலேரியா நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 7 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புதிய ஒட்டுண்ணியால் ஏற்படப் போகும் ஆபத்து
பாரம்பரிய மலேரியா ஒட்டுண்ணிகளைப் போலல்லாமல் இது மனிதர்களைப் போலவே விலங்குகளையும் தொற்றும் திறன் இந்த புதிய ஒட்டுண்ணிக்கு இருப்பதால் இந்நோயை முற்றாக ஒழிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
இந்த ஒட்டுண்ணி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இருந்து வந்தாலும் விலங்குகளைத் தொற்றும் திறன் காரணமாக இது மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலையாகக் கருதப்படுகிறது.
இதன் மூலம் நோய் பரவினால் மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் நோயைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக அமையும்.
ந்த ஒட்டுண்ணி காரணமாக மலேரியா ஒழிப்புத் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் பாதிக்கப்படலாம்.
நோய் பரவுவதைத் தடுப்பதற்காகக் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள இதுவே பொருத்தமான தருணம் என்று குறிப்பிட்டிருந்தார்.