ஆசிரியர்களின் ஆடை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய கோரிக்கை
அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான முடிவு பொதுவானதாக இருக்க வேண்டுமே தவிர வெவ்வேறு நபர்களால் முடிவெடுக்க முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடை சுற்றறிக்கை

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டால் அதற்கென கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட வேண்டும்.
வசதியான ஆடைகளை அணிந்து அலுவலகங்களுக்கு வருமாறு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை தன்னிச்சையாக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான முடிவு பொதுவானதாக இருக்க வேண்டுமே தவிர வெவ்வேறு நபர்களால் முடிவெடுக்க முடியாது.
சட்ட நடவடிக்கை

எனவே, அமைப்பு இல்லாமல் தன்னிச்சையாக மாற்றங்களைச் செய்தால் கண்டிப்பாக நீதிமன்றம் செல்வோம். தற்போது உள்ளதை அப்படி மாற்ற முடியாது.
சேலை அணிவதில் வெளிப்படையாக எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆசிரியர்கள் சேலை அணிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அவர்களுக்கு சீருடை கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட வேண்டும்.”என கூறியுள்ளார்.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam