சுற்றுலா பயணிகளின் வருகையில் புதிய சாதனை
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 644,186 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் வருகை
இவ்வருடம் மார்ச் மாதத்தில் நாட்டிற்கு அதிகளவான சுற்றுலா பயணிகள்(106,500) வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இம்மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 16,168 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
20 நாடுகள்
முக்கியமாக 20 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இதுவரை நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களில் அதிகமானோர் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 108,510 என்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை 78,827 பிரித்தானிய பிரஜைகளும் 74,713 ரஷ்ய பிரஜைகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 16 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
