ரிஷி சுனக்கிற்கு எழுந்துள்ள புதிய சிக்கல்!
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிராக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 40 எம்.பிகள் போர் கொடி தூக்கியுள்ளனர்.
தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதாகவும், அரசின் திட்டங்களில் பன்முகத்தன்மை, சமத்துவம் காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அரசின் திட்டங்களில் பன்முகத்தன்மை,சமத்துவம் காணப்பட்டால் அரசுப் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து கன்சர்வேட்டிவ் முன்னேற்றம் குழுவைச் சேர்ந்த குறித்த எம்பிகள் ரிஷி சுனக்குக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளனர்.
குறித்த கடிதத்திலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
புதிய இயக்கம்
ரிஷி சுனக்கின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஆளும் கட்சிக்குள்ளேயே புதிய இயக்கமொன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கம் அவரது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களின் இந்த செயற்பாடு பிரதமருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.