ஜனவரியில் புதிய அரசியல் கூட்டணி! மைத்திரி தகவல்
எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் கூட்டணி பற்றிய விபரங்கள் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் கூட்டணியின் கீழ் அரசியல் செயற்பாடுகள் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசியல் கூட்டணி
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்து வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 18 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
