அமெரிக்கா - ஈரான் இடையே புதிய தொடக்கம்: அமைதிக்காக இணைந்து செயல்பட ட்ரம்ப் நிர்வாகம் முடிவு
அமெரிக்காவும் ஈரானும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த 'ஒன்றாக இணைந்து செயல்படும்' என்று அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு ஈரானே முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டிய அவர், ஈரான் பிராந்திய ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் ஒரு காரணியாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.
ட்ரம்ப் நிர்வாகம்
இருப்பினும், கடந்த சில மணிநேரங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் "மிகச்சிறந்த" முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனிவரும் காலங்களில் இரு நாடுகளும் இணைந்து அமைதியையும் வளத்தையும் மேம்படுத்தக்கூடிய ஒரு "கூட்டு எதிர்காலத்தை" நோக்கி நகர முடியும் என்று வான்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானிய மக்களுடனான உறவை முற்றிலும் மாற்றி, ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்துமாறு தங்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தனது உரையில் விவரித்துள்ளார்.