மோட்டார் சைக்கிளில் பந்தயத்தால் ஏற்பட்ட விபரீதம்: மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (25) காலை 10.30மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி - மீராவோடை ஊடாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை கிளை பேருந்து வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை
வீதியால் மூன்று மோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களே விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதில், இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல் - குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam
