சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை கையளிப்பு
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை கையளிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று(04.03.2024) கருத்து தெரிவிக்கும் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
நம்பிக்கையில்லா பிரேரணை
"நாளைய தினம் குறித்த பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதியை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளோம்.முன்னதாக உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த திருத்தங்களை உரியமுறையில் மேற்கொள்ளாது இணையவழி கட்டுப்பபாட்டு சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன் இதனை சுட்டிக்காட்டிய போதும் அதனை சட்டமாக்கும் சபையில் சபாநாயகர் கையெழுத்திட்டதாகவும் அந்த கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் காரணமாகவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |