ஒரு பிள்ளையின் தாய் படுகொலை: மைத்துனர் தலைமறைவு
கிரிந்திவெல ஊராபொல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் இன்று(08.11.2023) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான கே.ஏ.சஞ்சீவனி எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பல வருடங்களாக வெளிநாட்டில் தொழில் செய்து வருகின்றார் எனவும், அந்தப் பெண் கணவரின் தாய், தந்தை மற்றும் சகோதரருடன் கணவரின் வீட்டில் வசித்து வந்தார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் வீட்டின் வரவேற்பறையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட அந்தப் பெண்ணின் கணவரின் தாயார், சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயாருக்கு அறிவித்துள்ளார்.
கொலைக்கான காரணம்
அதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். பூகொட நீதிமன்ற பதில் நீதிவான் கமல் சம்பந்த பெரும சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைப் பார்வையிட்டார்.
சடலத்தை வத்துபிட்டிவல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு உத்தரவிட்ட நீதிவான், அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாரைப் பணித்தார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் மைத்துனர் (கணவரின் சகோதரன்) கொலைக்குப் பின்னர் தலைமறைவாகியுள்ளார் எனவும், கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் கிரிந்திவெல பொலிஸார் குறிப்பிட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
