வாழைச்சேனை வைத்தியசாலையில் சிற்றூழியர் ஒருவர் கைது
மட்டக்களப்பு - வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பெண்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதியிலுள்ள பெண் நோயாளர் ஒருவருக்கு உதவியாக இருந்த யுவதி ஒருவர் மீது பாலியல் சேட்டை விட முயற்சித்த சிற்றூழியர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த வைத்தியசாலையில் சிற்றூழியராக பணி புரியும் 48 வயதுடைய மீராவோடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் சம்பவதினமான நேற்று பெண்கள் விடுதிக்குச் சென்று அங்கு நோயாளர் ஒருவருக்கு உதவியாக இருந்த 22 வயது யுவதி மீது பாலியல் சேட்டை விட முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த யுவதி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சிற்றூழியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்கேதநபர் கடமை நேரத்தில் மது பாவித்து வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
