அரசுக்கு பெரும் நன்மையை செய்த அமைச்சர் குறித்து வெளியான தகவல்!
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து வெளிநாடு ஒன்றுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு வந்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் மூலம் அவர் ஒரு தொகை பணத்தை அரசுக்கு மீதப்படுத்திக் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
அண்மையில் அமைச்சர் பந்துல குணவர்த்தன ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
நிதியை பெறவில்லை
விமானத்தில் அமைச்சர் ஒருவருக்கான வசதியைப் பெறாது சாதாரண பயணிகள் அமரும் ஆசனத்திலேயே அவர் அமர்ந்து சென்றுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுக்கு செல்வதற்கு 9 மணி நேர பயணம். அவர் ரஷ்யாவில் இறங்கும் வரை
அவ்வாறே சென்றுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அதுமட்டுமல்ல, அவரது பயணத்துக்காக அமைச்சால் வழங்கப்பட்ட எவ்விதமான நிதியையும் அவர் பெறவில்லை என்றும் அவர் சொந்தப் பணத்தையே செலவழித்துள்ளார்.
இதனால் அவர் ஒரு தொகை பணத்தை அரசுக்கு மீதப்படுத்திக் கொடுத்துள்ளார் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri
