சஜித்துக்கு தலைவலியாகியுள்ள தலதா அத்துகோரளவின் விமர்சனம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, கட்சியையும் கட்சித் தலைவரையும் விமர்சித்து, தனது எம்.பி பதவியையும் கட்சி உறுப்புரிமையையும் துறந்ததை அடுத்து, கட்சிக்குள் பல கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகி தலதா அத்துகோரள விடுத்த விசேட அறிக்கை மற்றும் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் மற்றும் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலேயே இந்த கருத்தாடல்கள் அமைந்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் சில நாட்களுக்குள் பல கட்சி முக்கியஸ்தர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகும் அல்லது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் போக்கு வலுவாக இருப்பதாகவும் கட்சியின் உள் வட்டாரங்கள் கூறுகின்றன.
சிறுபான்மை அரசியல் கட்சி
அக்கட்சியுடன் தொடர்புடைய சிறுபான்மை அரசியல் கட்சிகளும் தற்போதைய நிலைமையை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்து வருகின்றதுடன் சஜித் பிரேமதாசவிற்கு பாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில், தமது அரசியல் நிலைப்பாடுகளை சில உறுப்பினர்கள் மீள்பரிசீலனை செய்ய தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியில் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் சஜித் நேற்று விசேட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதனிடையே கட்சியை விட்டு வெளியேறும் சந்தேகத்திற்குரிய எம்.பி.க்களுடன் மேலும் நட்புறவைப் பேணுவதற்கு சஜித் முயற்சிப்பதாக கருத்துக்களும் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
தலதா அத்துகோரளவின் நேற்றைய நாடாளுமன்ற உரையில், “சஜித் பிரேமதாச இன்னும் 05 வருடங்கள் கட்சிக்காக மாத்திரமன்றி தனது சொந்த அரசியல் எதிர்காலத்திற்காகவும் பொறுமையாக காத்திருந்தால் இன்று எமக்கு இந்த பாரிய சவால் இருக்காது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி
உங்களை அதாள பாதாளத்திற்கு தள்ளுபவர்களின் ஒரே நம்பிக்கை உங்களை ஜனாதிபதியாக்குவது அல்ல என்பதை சஜித் பிரேமதாசவிடம் கூறுகின்றேன்.
அடுத்த முறை நாடாளுமன்றத்துக்கு வருவார்களிடம் எங்கள் கட்சி அதை தியாகம் செய்வதை என்னால் பார்க்க முடியவில்லை, அதை அவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் நான் பேச விரும்பும் சில முக்கிய விடயங்களை இன்று குறிப்பிட விரும்புகின்றேன்.
முதலாவது விடயம் ஜேவிபி அணி தற்போது தேசிய மக்கள் சக்தியாக பரந்த முகாமாக மாறிக்கொண்டிருக்கும் போது, இந்த நாட்டின் மிகப் பெரிய அரசியல் கட்சியாகவும் அரசியல் முகாமாகவும் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஏன் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது?
எங்கள் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் துணைத் தலைவரும் போட்டியாளர்களாகிவிட்டனர்.
எனவே ஒரே முகாமை இரண்டாக பிரித்து இரண்டு பேர் போட்டியிடுவது திட்டமிட்ட மோசடி இல்லையா?
இரண்டாவது, எமது கட்சி பிளவுபட்டதற்குக் காரணம் எந்தவொரு அரசியல் காரணத்திற்காகவும் இல்லை என்பது முழு நாடும் அறிந்ததே.
மையப்படுத்தப்பட்ட ஜனநாயகம்
கட்சியில் மையப்படுத்தப்பட்ட ஜனநாயகம் இல்லாததால், தலைமைத்துவம் பற்றிய சர்ச்சை. ஆனால் அவர் இப்போது இந்த நாட்டின் ஜனாதிபதி. அவருடன் இருந்த ராஜபக்ச அணியினர் அவரை விட்டு விலகி தற்போது தனித்து போட்டியிடுகின்றனர்.
இயற்கையே எல்லாத் தடைகளையும் நீக்கி, நிச்சயமான வெற்றியை நமக்கு வழங்கியிருக்கும் போது நாம் ஏன் அதை ஏற்க மறுக்கிறோம்?
இந்த எளிய உண்மையை உங்களால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?
இந்த ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு வழங்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தேசியக் கடமையும் பொறுப்பும் இரு தரப்பினரும் ஒன்றிணைந்து நாட்டில் பாரியதொரு அரசியல் சக்தியை உருவாக்கி அதில் வெற்றி பெற்று நாட்டை வெற்றியடையச் செய்ய வேண்டும்.
அது உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. இதை ஏன் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை? ஏன் தேவையில்லாத சவாலை எடுத்தீர்கள்?
ஒரே முகாமை சேர்ந்த இருவர் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததன் காரணமாக, இம்முறை தோற்றால் அது நம் அனைவருக்கும் பின்னடைவாக இருக்கும் என உணர்கிறேன்.
இந்த கசப்பான உண்மையை ஏன் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை?
மூன்றாவது விடயம் என்னவென்றால், நாட்டின் வடகிழக்கில் அண்மைக்காலமாக தமிழ், முஸ்லிம்களின் நிலைமை பற்றி நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.
2005 ஜனாதிபதித் தேர்தலில் எமது வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தோற்கடிக்கப்படுவதற்குப் பலமான காரணம் ராஜபக்ச குழுவின் புறக்கணிப்பு.
அன்று தமிழர்கள் செய்த தவறை திருத்திக்கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். ஆனால் நீண்டகாலமாக எமது தரப்புக்கு வாக்களிக்கக் காத்திருந்தவர்களுக்கு இன்று இக்கட்டான நிலை உருவாகியுள்ளது.
திருடர்களுடன் ஆட்சி
நான்காவது, ரணில் விக்ரமசிங்க திருடனுடன் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது. அது எங்கள் மகிழ்ச்சிக்குத் தடையாகிவிட்டது.
அப்போது திருடர்களை வைத்துக்கொண்டு திருடர்களுடன் ஆட்சி செய்வதாக குற்றம் சாட்டினார். இப்போது என்ன நடக்கிறது?
அப்போது திருடர்களின் ஆட்சி கப்பல் மூழ்கிய போது, அந்தக் கப்பலில் இருந்து குதித்த திருடர்களும், ஊழல்வாதிகளும் இப்போது தயக்கமின்றி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.
அதைவிட தீவிரமான பக்கமும் இருக்கிறது. அன்று வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்சவுடன் அந்தத் திருடர்கள் ஆட்சி செய்த போது, 2019 இல் நாம் பெற்ற தோல்வியில் இருந்து இன்று வரை, சமது கட்சியை பாதுகாத்த மூல உறுப்பினர்களும், அதன் தலைவர் சஜித் பிரேமதாசவும், திருடர்கள் மற்றும் ஊழல்வாதிகளின் வருகையால் பெரும் ஏமாற்றமும், ஓரங்கட்டப்பட்டும் உள்ளனர்.
அரசியல் கும்பல் மட்டுமின்றி, விளையாட்டு, வியாபாரம் போன்ற பல்வேறு துறைகளிலும் கும்பல் உள்ளது.
இந்த சூழ்நிலையை நான் தாங்குவது மிகவும் கடினம். எமது அரசியல் வரலாற்றில் ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க ஆகிய மூன்று ஜனாதிபதிகளும் அதிகாரத்திற்காக சகிப்புத்தன்மையின் பாடத்தை கற்றுக் கொடுத்தனர்.