கொழும்பில் சரிந்து வீழ்ந்த பாரிய விளம்பரப்பலகை
கொழும்பு (Colombo), பம்பலப்பிட்டி பகுதியில் நேற்று (20.05.2024) மாலை வீசிய பலத்த காற்றினால் பாரிய விளம்பரப்பலகை ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை.
எனினும், விளம்பரப்பலகை பொருத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இதேவேளை, பலத்த காற்றினால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று மின்சார தடையும் ஏற்பட்டிருந்தது.
நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக இலங்கையை ஊடறுப்பதனால் நிலவுகின்ற காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை தொடரக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேவேளை, இன்றையதினம் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால், நாட்டுமக்களை அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |