மட்டக்களப்பில் இறால் பிடிக்க சென்றவர் முதலை கடித்து சடலமாக மீட்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய உப்போடை நீரோடையில் (களப்பு) இறால் பிடிப்பதில் ஈடுபட்ட ஒருவரை முதலை இழுத்துச் சென்ற நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குமாரபுரம் புன்னைச்சோலையைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய ஆரோக்கியநாதன் மரியதாஸன் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த நபர் வழமைபோல நேற்று திங்கட்கிழமை மாலை பெரிய உப்போடைக் களப்பு பகுதில் இறால் பிடிப்பதற்கு சென்றுள்ளார். எனினும் குறித்த நபர் இரவாகியும் வீடுதிரும்பாததால் உறவினர்கள் அவரை தேடியுள்ளனளர்.
இந்தநிலையில் இன்று பகல் 3 மணியளவில் கிரியோடை நீரோடையில் முதலைக்கடித்து உயிரிழந்த நிலையில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகன மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri