காத்தான்குடியை சேர்ந்த நபரொருவர் கொழும்பில் கைது
ஈஸ்டர் தொடர் தாக்குதல்களுக்கு உடந்தையாக செயற்பட்ட குற்றச்சாட்டில் காத்தான்குடியைச் சேர்ந்த நபரொருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்ததாக காத்தான்குடியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் இருந்து பெறப்பட்ட தகவல் ஒன்றின் பிரகாரம் குறித்த நபர் நேற்று (16) கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட மொகமட் ஜாபார் (34) என்ற சந்தேகநபரே பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடியில் உள்ள அவரது உறவினர்களுக்கு காத்தான்குடி பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே தாக்குதல் தொடர்பாக கைதாகியுள்ள சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.


உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
