யாழில் முச்சக்கர வண்டி மோதி ஒருவர் மரணம்
யாழ்ப்பாணத்தில்(Jaffna) முச்சக்கர வண்டி மோதியதில் நபர் ஒருவர் நேற்றுமுன்தினம்(25) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வைத்தியசாலை வீதி பகுதியைச் சேர்ந்த அன்ரனி தேவதாஸ் (வயது 60) என்பது தெரியவந்துள்ளது.
மரணம்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கடந்த 24ஆம் திகதி வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் அவர்மீது முச்சக்கர வண்டி மோதியுள்ளது.பின்னர் அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
மூச்சு திணறல்
இந்நிலையில் 25ஆம் திகதி அதிகாலை அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.ஆகையால் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam