பண்டாரவளையில் மண்சரிவு! நபர் ஒருவர் பலி(Video)
பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஹகல்ல அம்பரவ பகுதியில் நேற்று (31.10.2022) பெய்த கடும் மழையினால் மண்மேட்டுடன் கூடிய கொங்கிறிட் கட்டிடம் வீட்டின் மீது சரிந்து வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 73 வயதுடைய டபிள்யூ.எம். ஜெயசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது மனைவியுடன் வீட்டின் அறையில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் உயிரிழந்தவரின் மனைவி தெய்வாதீனமாக காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தியத்தலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
காயங்களுடன் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபரின் மனைவி தொடர்ந்தும் சிகிச்சைகளை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
தற்போது மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளாக தெரிவித்த பண்டாரவளை பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும்
இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல்
விடுத்துள்ளனர்.









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
