உடையார் குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு (Photo)
புத்தளம் - மன்னார் வீதியின் 2ஆம் கட்டைப் பகுதியிலுள்ள உடையார் குளத்திலிருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (04.01.2023) பதிவாகியுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் 49 வயதுடைய மொஹமட் சுஹைல் என்ற 5 பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆணொருவரின் சடலம் மீட்பு
சடலமாக மீட்கபட்ட நபர் நேற்று (03.02.2023) வீட்டிலிருந்து வெளியில் சென்று, காணாமல்போன நிலையில் வீட்டார் தேடியுள்ளனர்.
இதன்போது குறித்த நபர் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரண விசாரணை
இதற்கமைய சம்பவ இடத்திற்கு புத்தளத்திற்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸார் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
