உயர்தர பரீட்சை வினாத்தாள் முறைகேடுகள் விவகாரம்! ஆரம்பமான சிஐடி விசாரணை
அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் சமீபத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் பொதிகள் திறக்கப்பட்டுள்ள விவகாரம்
குறித்த மையத்தில் வினாத்தாள் பொதிகள் திறக்கப்பட்டிருந்தபோதிலும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் எந்த வினாத்தாள்களும் கசிந்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பரீட்சைகள் திணைக்களமும், பொலிஸாரும் விசாரணையை நடத்தியுள்ளன.
க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும், பரீட்சை பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.