பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹரா..! முப்படையினர் குவிப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் பாதுகாப்பிற்காக முப்படைகளை சேர்ந்த சுமார் 8,000 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதற்கேற்ப, 6,200 பொலிஸ் அதிகாரிகள், 564 பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள், 1,200 முப்படை உறுப்பினர்கள் மற்றும் 29 சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
14 இடங்களில் வீதி தடைகள்
கண்டி எசல பெரஹரா நிகழ்வு ஆகஸ்ட் 18 முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, பாதுகாப்பிற்காக பொலிஸ் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பெரஹராவின் போது 14 இடங்களில் வீதி தடைகள் அமைக்கப்படும் என்றும், 13 வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.