கோடீஸ்வரர் ஒருவரின் வீட்டில் இருந்து பெரும் தொகை தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் திருட்டு
பிலியந்தலை மகுலுதுவ பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இன்று (27) பிற்பகல் இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டின் அலமாரியில் இருந்த எழுபது பவுனுக்கும் அதிகமான தங்கம் மற்றும் யூரோக்களை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
அலமாரியின் இரகசிய பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த தங்கப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டுப் பணம் என்பன திருடப்பட்டுள்ளன திருட்டுச் சம்பவத்தின் போது அங்கு யாரும் இல்லை என்பதும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணைகளுக்கு பொலிஸார் உத்தரவு
திருட்டுக்கு வந்தவர்கள் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாய்களின் கதவுகளை திறந்து அதனை வெளியே அனுப்பிவிட்டு திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டை நன்கு அறிந்த நபர் அல்லது குழுவினர் இந்தத் திருட்டைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் உத்தியோகபூர்வ பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் குற்றப் புலனாய்வாளர்களும் திருட்டு பற்றிய தகவல்களைக் கண்டறிய அனுப்பப்பட உள்ளனர்.
பிலியந்தலை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சனத் ரஞ்சித்தின் பணிப்புரையின் பேரில் குற்றத்தடுப்பு பிரிவின் கட்டளைத்தளபதி பொலிஸ் பரிசோதகர் தினேஷ் ஹெட்டியாராச்சி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
