உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு
உயர்தரப் பரீட்சை பதற்றம் காரணமாக கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள உள்ள ஒரு பாடசாலையின் மூன்றாம் மாடியிலிருந்து மாணவியொருவர் குதித்துள்ளார்.
இன்று பிற்பகல் 19 வயது உயர்தர மாணவி ஒருவர் பாடசாலை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவையைச் சேர்ந்த இந்த மாணவி, இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக உயர்தர பரீட்சைக்குத் தோற்றுகின்றார்.
குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம்
சம்பவம் உயிரியல் வினாத்தாள் தொடங்குவதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பு இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவி விழுந்த இடம் கார்பட் செய்யப்பட்ட பகுதியாக இருந்ததால், உயிர் தப்பியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவி பரீட்சையை எதிர்கொள்வதில் கடுமையான மனஅழுத்தத்தை அனுபவித்து வந்ததாக தெரியவந்துள்ளது.
அவரின் குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களிலும் இந்த தகவலை உறுதிப்படுத்தப்படுத்தியதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri