முறிப்பு பகுதியில் இரண்டாவது முறையாக வீடு ஒன்று தீக்கிரை
முறிப்பு பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் இரண்டாவது தடவையாக வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிதத சம்பவம் இன்றையதினம் (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் அமைந்துள்ள நபர் ஒருவரின் வீடே இன்றையதினம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருகையில்,
சிகிச்சை பலனின்றி பலி
முறிப்பு பகுதியில் குழுக்களுக்கிடையில் 13.02.2025 இடம்பெற்ற கைக்கலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 14.02.2025 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து நேற்றையதினம் இரவு ஒரு வீடு எரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாவது தடவையாக இன்றையதினம் உயிரிழந்தவரின் எதிராளிகளில் ஒருவரின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பரிதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த கைக்கலப்பு சம்பவத்தில் 36 வயது மதிக்கத்தக்க முறிப்பு பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தரே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் மரணமடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
