யாழில் வன்முறை கும்பலால் தீக்கிரையாக்கப்பட்ட வீடு(Video)
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றினால் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டள்ளது.
நீண்ட காலங்களாக இரு குழுக்களிடையே ஏற்பட்டிருந்த பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு பகுதி முற்றாக சேதம்
இதன்போது வீட்டினுடைய ஒரு பகுதி(அறை) முற்றாக சேதமடைந்துள்ளது.
குறித்த வீட்டினுள் நேற்று முன்தினம் உட்புகுந்த நால்வர் அடங்கிய வன்முறை கும்பல் வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி வீட்டுக்கு தீ வைத்துள்ளனர்.
தீ வீடு முழுவதும் பரவியதில் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை உட்பட பெறுமதியான பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
திருமணம் செய்து தருமாறு வற்புறுத்தல்
குறித்த வீட்டில் வசிக்கும் 15 வயதான சிறுமியை தனக்கு திருமணம் செய்து தருமாறு இளைஞன் ஒருவர் வற்புறுத்தி வந்ததாகவும் , அதற்கு வீட்டார் சம்மதிக்காத நிலையில் , இளைஞனின் குழுவால் அவர்களுக்கு அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் அந்த குழுவினரே வீட்டினுள் நுழைந்து வீட்டுக்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
