இன்று பல பகுதிகளில் வெப்பமான வானிலை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையம், நாட்டின் சில பகுதிகளுக்கு அம்பர் அளவிலான வெப்பமான வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது அசௌகரியம் மற்றும் சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய வெப்பநிலை அதிகரிப்பு என்று அந்த மையம் எச்சரிக்கிறது.
வானிலை எச்சரிக்கை
நவம்பர் 2 அன்று பிற்பகல் 3:30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தலின்படி, நவம்பர் 3 ஆம் திகதிக்கும் இந்த அறிவிப்பு செல்லுபடியாகும், இதன் போது, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை - கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் "எச்சரிக்கை நிலை" வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் வெப்பம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதாவது அதிகமாக நீர் அருந்துவது இலேசான ஆடைகளை அணிவது மற்றும் நண்பகல் நேரங்களில் நீண்ட நேரம் வெளியில் வெளிப்படுவதைத் தவிர்ப்பது போன்றவற்றை கைக்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரப்படுகின்றனர்.
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam