நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்த காட்டு யானைக்கூட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியும், அம்பாறை - உகன பிரதேசத்திற்குட்பட்ட கலப்பிட்டிகல எனும் கிராமத்திற்குள் இன்று அதிகாலை புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த பயன்தரும் பல மரங்களையும், தோட்டங்களையும் அழித்துத் துவம்சம் செய்துள்ளதாகப் பிரதேசவாசிகள் கவலை தெரிவித்துள்ளார்.
அதிகாலை சுமார் 1.30 மணியளவில் இவ்வாறு புகுந்த காட்டு யானைக்கூட்டத்தினால் அக்கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கிராமத்திற்குள் காட்டு யானைக்கூட்டம் புகுந்ததை அவதானித்த மக்கள் நள்ளிரவு வேளையில் மிகுந்த அச்சத்துடன் யானைக்கூட்டத்தை அப்புறப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.
எனினும் அங்கிருந்த பயன்தரும், வேளாண்மை, தென்னை, வாழை, பலா, மா, மரவெள்ளி உள்ளிட்ட தோட்டங்களை அழித்து துவம்சம் செய்துவிட்டு யானைக்கூட்டம் வெளியேறியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.