மட்டக்களப்பில் தென்னம் தோட்டத்தை துவம்சம் செய்த காட்டு யானைக்கூட்டம்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட மாவடிமுன்மாரி முதலைமடு வயற்கண்டத்தில் அமைந்துள்ள தென்னம் தோட்டத்தை நேற்று இரவு காட்டு யானைக்கூட்டம் அழித்து துவம்சம் செய்துள்ளது.
தற்போது பெரும்போக நெல் அறுவடைக் காலமாகையால் காட்டு யானைகளின் தாக்குதல்களும், அழிவுகளும், மிகவும், வெகுவாக அதிகரித்த வண்ணமுள்ள நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் சுமார் 10 இற்கு மேற்பட்ட காட்டு யானைகளை கொண்ட கூட்டம் உட்புகுந்து அப்பகுதியில் அமைந்துள்ள நெல் வயல்களையும் அழித்துள்ளதோடு, தென்னம் தோட்டம் ஒன்றையும் அழித்து துவம்சம் செய்துள்ளது.
நள்ளிரவில் காட்டுகள் வந்து தமது தென்னம் தோட்டத்தை அழிக்கும் சத்தம் கேட்டதும், அத்தோட்டத்திலிருந்த இரு முதியவர்களும் தெய்வாதீனமாக உயிர் பிழைத்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
மிக நீண்டகாலமாகவிருந்து காலத்திற்குக் காலம் இவ்வாறு காட்டு யானைகளின் தாக்குதல்களையும், அழிவுகளையும் எதிர்கொண்டு வரும் தமக்கு இதிலிருந்து நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் தமது பகுதியில் நிலைகொண்டுள்ள காட்டு யானைகளை பிடித்து கொண்டு யானைகள் சரணாலயத்தில் விட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் மீண்டும் யானைகள் கிராமங்களுக்குள்ளும், வயல் வெளிகளுக்குள்ளும் வராமலிருக்க எல்லை புறத்தில் யானைப் பாதுகாப்பு வேலிகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிப்பதோடு, மின்சாரம் இல்லாத தமது தோட்டங்களுக்கும், எல்லைப்பகுதிகளுக்கும், மின்சார வசதிகளையும் ஏற்படுத்தி யானை சுமார் 15 வருடங்கள் பழமை வாய்ந்த பலன்தரும் தென்னைகளின் அழிவுக்கு இழப்பீட்டையும் பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசங்கள் மிக நீண்ட காலமாகவிருந்து அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.









அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam