மீண்டும் பணிக்கு திரும்பவுள்ள இளவரசி கேட் மிடில்டன்
இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டபின் மீண்டும் பணிக்குத் திரும்பவுள்ளதை உறுதி செய்யும் வகையில் இளவரசர் வில்லியம் (William, Prince of Wales), இளவரசி கேட் தம்பதியர் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜனவரி மாதம் அறுவ சிகிச்சை ஒன்றிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளவரசி கேட், பின்னர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தனக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்க, அவரது ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் பிரித்தானிய மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
சிகிச்சை பெற்றுவரும் நிலை
இளவரசி புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தனது மாமனாரான மன்னர் சார்லசைப்போலவே, சிகிச்சையின் நடுவிலேயே பணிக்குத் திரும்ப அவரும் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
This #MentalHealthAwarenessWeek we've brought together the inspirational Sam Stables from We Are Farming Minds and the brilliant Farmer Will for a very special film.
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) May 17, 2024
Spending a day together on Sam's farm in Hereford they chatted about mental health in the farming community,… pic.twitter.com/wWohhanuFZ
அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றிலிருந்து, விவசாயிகள், குறிப்பாக பண்ணை வைத்திருக்கும் இளம் விவசாயிகளின் மன நலம் தொடர்பிலான பணி ஒன்றிற்காக கேட் தனது கணவரான இளவரசர் வில்லியமுடன் கைகோர்த்துள்ளமை உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் கேட்டின் உடல் நிலை குறித்து கவலையில் ஆழ்ந்துள்ள அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |