யாழில் கட்டி வைத்து தாக்கப்பட்ட சிறுமி : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
புதிய இணைப்பு
வடமராட்சி கிழக்கு குடத்தனை பொற்பதியில் சிறுமி ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியமை சம்பந்தமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரி மருதங்கேணி பொலிசாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேற்படி பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் (23) மாலை அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் வாங்க சென்றதாகவும் அங்கு இனிப்பு வகையை களவாயாடியதாக கூறி கடையின் உரிமையாளரான பெண் மேற்படி சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உடல் காயங்களுக்கு உள்ளான சிறுமி அன்று இரவே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.
செய்தி - தீபன்
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி, பொற்பதி பகுதியில் கடை ஒன்றில் கெண்டோஸ் திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் 10 வயது சிறுமியை சரமாரியாக தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை அவரது தாயார் கடைக்கு சென்று அங்கு சில பொருட்களை கொள்வனவு செய்து வருமாறு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுமி குறித்த கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.
கடுமையான தாக்குதல்..
மிகுதி பணத்திற்காக சிறுமி அதற்கு பெறுமதியான கெண்டோஸ் ஒன்றினை எடுத்து உண்டுகொண்டிருந்த நிலையில் கடை உரிமையாளர் திருடப்பட்தாக கருதி குறித்த 10 வயது சிறுமியை சிறுநீர் கழியும்வரை வயரால் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதன்போது, சிறிது நேரம் கழித்து சிறுமியின் கட்டை அவிழ்த்து விட்டுள்ளனர். இந்நிலையில் சிறுமி வேதனை மற்றும் அவமானம் தாங்க முடியாது தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்றுள்ளார்.
குறித்த விடயமறிந்த பெற்றோர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிறுமியை கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 3 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
