யாழில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் : உயர் நீதிமன்றத்தை நாடும் சுயேட்சை குழு
மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ். மாநாகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழு வரும் வெள்ளியன்று குதித்த தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (24.03.2025) வேட்புமனு நிரகரிப்பு தொடர்பில் ஊடக சந்திப்பை மேற்கொண்டு குறித்த சுயேச்சை குழுவின் தலைவர் சுலக்சன் மற்றும் வேட்பாளர் விஜயகாந்த் ஆகியோர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல்
மேலும், "எமது சுயேச்சைக் குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் தலைமையில் யாழ்ப்பாணம், கோப்பாய், வேலணை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் சுயேச்சைக் குழுவாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தது.
இதில் யாழ். மாநகரின் வேட்புமனு பெண் வேட்பாளரது உறுதியுரை குறித்த விடயம் தொடரிலான சர்ச்சையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாம் சட்டத்தின் பிரகாரமே வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தோம். அதன்படி யாழ். மாநகரில் எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விடயம் குதித்து நாம் சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்துள்ளோம்.
அதன்படி தேர்தல் திணைக்களத்தின் இந்த அறிவுப்புக்கு எதிராக நாம் நியாயம் கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
