பாடசாலை ஒன்றில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!
தெனியாய, பெவர்லி தமிழ் மகா வித்தியாலயத்தில் எரிவாயு வெடிப்புச் சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
சமையலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடசாலை அறையொன்றில் ஆசிரியர்கள் தேனீர் தயாரிப்பதற்கு முற்பட்டபோதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திருகோணமலை தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று நேற்று இரவு 11.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக்கொண்டிருந்த போது எரிவாயு சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிவாயு கசிந்து இவ்வெடிப்பு இடம் பெற்றிருக்கலாம் என தெரியவருகிறது.
உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை
சம்பவ இடத்துக்கு தம்பலகாமம் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.




விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan
