வாத்துவ பகுதியில் இடம்பெற்ற தீவிபத்து! இரு சிறுமிகளின் நிலை
வாத்துவ - வேரகம பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாத்துவ, வேரகமவில் உள்ள அல்விஸ் தோட்டத்தில் இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தின் போது பெற்றோர்கள் வீட்டில் இருக்கவில்லை எனவும், 14 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளை உள்ளூர்வாசிகள் பாதுகாப்பாக மீட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பிரதேசவாசிகளால் வாத்துவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், களுத்துறை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் வீட்டின் மேல் தளத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam