புத்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட கொம்பன் யானை
புத்தளம் - ஆனமடுவ, செம்புவெவ பகுதியில் கொம்பன் யானையொன்று உயிரிழந்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த யானை இன்றையதினம் (02.09.2023) மீட்கப்பட்டுள்ளது.

யானை சடலமாக இருந்ததை அவதானித்த பிரதேச மக்கள், புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
உயிரிழந்த கொம்பன் யானை
இதன்போது கொம்பன் யானையின் தும்பிக்கை மின்சார வேலியில் சிக்குண்டதினால் யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த கொம்பன் யானை 40 வயதுடையது எனவும் 9 அடி உயரம் மற்றும் அதன் தந்தம் 2 அரை அடி நீளம் எனவும் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த உயிரிழந்த யானைக்கு உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri