திருகோணமலையில் போதைப்பொருள் வியாபாரியொருவர் கைது
திருகோணமலை - ரொட்டவெவ பகுதியில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று (25.03.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன்போது பல நாட்களாக கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 45 வயதுடைய நைசர் என்றழைக்கப்படும் முஹம்மது ஹாசீம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும் மொரவெவ பொலிஸாரும் இணைந்து கந்தளாய் பிரதேசத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட மோப்ப நாய்களின் உதவியுடனும் குறித்த சந்தேக நபரை கஞ்சாவுடன் கைது செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் புலன் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
