இலங்கையில் ஜூன் மாதத்திற்குப் பின்னர் ஏற்படப்போகும் பாரிய இயற்கை அனர்த்தம்!
இலங்கையில் ஜூன் மாதத்திற்குப்பின்னர் எல் நினோ நிகழ்வு மற்றும் இந்தியப் பெருங்கடல் இரட்டை துருவ (IOD) நிகழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இவை செயல்பட்டால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கை கடும் வறட்சியை எதிர்கொள்ளும் என இலங்கை வலிமண்டவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன நேற்று தெரிவித்திருந்தார்.
எல் நினோ (El- Nino) தாக்கம்
தற்போது எல் நினோ நிலை நடுநிலையாக இருப்பதாகவும் ஜூன் மாதத்திற்குப் பின்னர் இலங்கையில் எல் நினோ (El- Nino) உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஜூன் மாதத்திற்குப் பிறகு எல் நினோ உருவாகும் சாத்தியம் சுமார் 10 முதல் 20 சதவீதம் வரை உள்ளது.
தற்போதைய வெப்ப நிலையின் அளவு ஏப்ரல் மாதம் முழுவதும் மற்றும் மே மாதத்தின் முதல் இரண்டு அல்லது மூன்று வாரங்களிலும் தொடரலாம்.

மே 20 முதல் 25 வரை தென்மேற்கு பருவமழை செயல்படும் என எதிர்பார்க்கப்படுவதால் மே மாதத்தில் ஓரளவு மழை கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மே மாத இறுதி வாரத்திற்குப் பிறகு வெப்பச் சுட்டெண் குறையும் என்று அவர் கூறினார். மேலும் மோசமான சூழலில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கை வறட்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம் என்றும் விஜேமான்ன தெரிவித்தார்.
பொதுவாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் குறைந்த மழைப்பொழிவு தான் கிடைக்கும்.
ஆனால் எல் நினோ மற்றும் (IOD) நிகழ்வுகள் செயல்பட்டால் இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வறட்சி நிலை உருவாகலாம் என்றும் அவர் கூறினார்.