ரஷ்யாவில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் - உலக செய்திகளின் தொகுப்பு (Video)
ரஷ்யாவின் வடமேற்கு நகரமான பிஸ்கோவ் விமான நிலையத்தில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இராணுவம் தாக்குதலை முறியடித்ததாக பிஸ்கோவ் பிராந்திய ஆளுநர் மிகைல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெடிக்கும் சத்தம் கேட்கும் அதே வேளையில், ஒரு பெரிய தீயைக் காட்டும் காணொளியை பதிவேற்றியுள்ளார்.
உறுதிப்படுத்தப்படாத ரஷ்ய ஊடக அறிக்கை ஒன்றில் நான்கு இலியுஷின் 76 போக்குவரத்து விமானங்கள் விமான நிலையத்தில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஸ்கோவ் உக்ரைனில் இருந்து 600km (372 மைல்கள்) தொலைவில், எஸ்டோனியாவின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு
