முல்லைத்தீவில் தொலைபேசிகளுக்கு வந்த குறுந்தகவல்: முண்டியடித்த மக்கள் கூட்டம்...!
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கு உட்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
நேற்றைய தினம் (06.02.2023) உலக உணவுத்திட்ட அதிகாரிகள் குறுந்தகவல் ஊடான அனுப்பிய தகவலுக்கமையவே இவ்வாறு நீண்ட வரிசையில் நின்று தமது பொருட்களை பெற்றுக்கொண்டனர்.
குறித்த மாவட்டத்தில் உணவு பற்றாக்குறை மற்றும் போசாக்கின்மையினை கருத்தில் கொண்டு உலக உணவுத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தினையும் உள்வாங்கி, முதற்கட்டமாக மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 50 கிலோ அரிசி, 20 கிலோ கடலைபருப்பு, 5 லீற்றர் தேங்காய் எண்ணெய் என்பன வழங்கியுள்ளது.
அடுத்த கட்டமாக சமூர்த்தி பயனாளிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபா பணமும் வங்கிகள் ஊடாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இருபதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள்
தற்போது நான்கு அங்கத்தவர்களை கொண்ட குடும்பம் சமூர்த்தி பயனாயியாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனைக்கு அமைவாக, தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு தொலைபேசி ஊடாக குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த குறுந்தகவலுக்கமைய இருபதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்ய ஹாகிர்ள்ஸ் புட்சிற்றி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரில் காணப்படும் ஒரோ ஒரு ஹார்கிள்ஸ் புட்சிற்றியில் மக்கள் தங்கள் அடையாள அட்டையினை உறுதிப்படுத்தி பொருட்களை பெற்றுக்கொள்வதில் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
இவ்வாறு இங்கு ஒன்பதாயிரத்தி 575 குடும்பங்கள் பதிசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவற்றை கண்காணிக்கும் நடவடிக்கையில் சர்வோதய நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
மக்கள் தங்களுக்கு விருப்பமான உணவு பொருட்களை பெற்றுசெல்வதில் ஆர்வம் காட்டினாலும் ஒரு கடை ஊடாக எவ்வளவு மக்களுக்கு இந்த பொருட்கள் வழங்கப்படும் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி விலையேற்றம் காரணமாக இருபதாயிரம் ரூபா ஒரு
குடும்பத்திற்கு ஓராளவு சமாளிக்ககூடியதாக இருக்கின்றது என வாங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
